Rahu – Ketu Peyarchi: ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2023 – 2025 (துலாம் முதல் மீனம் வரை)

Advertisements

ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2023 – 2025 (துலாம் – மீனம்)

பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

என்னுரை

அன்புள்ள வாசக பெருமக்களே! எல்லாம் வல்ல எம்பெருமான் முருகனின் அருளோடும். எனது தந்தை ஜோதிட சக்கரவர்த்தி தெய்வத்திரு முருகு இராசேந்திரனின் ஆசியோடும் இந்த ராகு- கேது பெயர்ச்சிப் பலனை உங்களுக்காக வழங்கியுள்ளேன். சர்ப கிரகங்களான ராகு- கேது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சோபகிருது வருடம் ஜப்பசி மாதம் 13-ஆம் தேதி 30-10-2023 திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலா ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர். 18-05-2025 இரவு 07.33 மணி வரை ராகு மேஷத்திலும், கேது துலாத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர். (வாக்கியப் பஞ்சாங்கபடி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21-ஆம் தேதி 08-10-2023 ஞாயிற்றுகிழமை மதியம் 03.35 மணி முதல் 26-04-2025 மாலை 04.08 மணி வரை). இதனால் 12 ராசி நேயர்களுக்கும் உண்டாக கூடிய பலா பலன்களை இப்புத்தகத்தில் தெள்ளத் தெளிவாக எழுதியுள்ளேன். இதனை படித்து அனைவரும் பலனடையும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
முனைவர் முருகு பாலமுருகன்

 

துலாம் ( சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் )

முன்கோபம் அதிகம் இருந்தாலும் தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் பிறரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 1, 7-ல் சஞ்சரித்த சர்ப கிரகங்கள் திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை (வாக்கியப்படி 08-10-2023 முதல் 26-04-2025 வரை) உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ம் வீட்டில் ராகு சஞ்சாரம் செய்ய இருப்பதும், விரைய ஸ்தானமான 12-ல் கேது சஞ்சாரம் செய்ய இருப்பதும் உன்னதமான அமைப்பாகும்.

உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தேவையற்ற நெருக்கடிகள் குறைய கூடிய அமைப்பு, உடல் ரீதியாக இருந்த பாதிப்புகள் குறைந்து எதிலும் தெம்போடு இருக்கக்கூடிய நிலை உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் குறையும்.

கூட்டு குடும்பத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தில் இருந்த கருத்து வேற்றுமை எல்லாம் விலகி ஒரு அமைதியான நிலை இருக்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்த மறைமுக பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். வெளியூர், வெளிநாடுகள் மூலமாக மிகவும் ஆதாயமான பலன்களை பெறுவீர்கள்.

ராகு 6-ல் சஞ்சரிப்பது மட்டுமில்லாமல் ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்க கூடிய அமைப்பாகும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி அடையும்.

வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். தொழில் ரீதியாக உங்களுக்கு இருந்த சட்ட பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி ஒரு சுமூகமான சூழ்நிலை உண்டாகும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகள் வருகின்ற நாட்களில் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட கூடிய அமைப்பும், உங்கள் உழைப்புக்கான ஆதாயங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் வருகின்ற நாட்களில் உண்டு. சக ஊழியர்கள் உங்களுக்கு தந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்.

தற்போது உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ம் வீட்டில் குரு பகவான் 01-05-2024 முடிய சஞ்சாரம் செய்வது ஒரு சிறப்பான அமைப்பாகும். இதன் காரணமாக உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்க கூடிய அமைப்புகள், நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய யோகம், சுப காரியங்கள் கைகூடக் கூடிய அமைப்பு ஏற்படும். கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்யக்கூடிய திறன் ஏற்படும்.

வரும் 01-05-2024 முதல் குரு பகவான் 8-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் குரு மாற்றத்துக்குப் பிறகு பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது. குரு 8-ல் சஞ்சரித்தாலும் உங்கள் ராசிக்கு 3, 6-க்கு அதிபதியான குரு 8-ல் சஞ்சரிப்பதால் விபரீத ராஜயோகம் ஏற்படும் என்ற காரணத்தினால் எதையும் சமாளிக்க கூடிய ஒரு பலம் உண்டாகும். அஷ்டமத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் சனி 5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக எந்தவித குறையும் இன்றி ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

கடந்த கால பிரச்சினைகளை எல்லாம் தற்போது ஏற்படக்கூடிய ராகு- கேது பெயர்ச்சியால் விலகி உங்கள் வாழ்க்கை தரம் வருகின்ற நாட்களில் உயரக்கூடிய ஒரு நிலை உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். கடந்த கால அலைச்சல் டென்ஷன்கள் குறையும். குடும்பத்தில் கடந்த காலத்தில் இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டு இருப்பவர்களுக்கு படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மன நிம்மதி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

பண வரவுகள் மிகச் சிறப்பாக இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பேச்சில் நிதானத்துடன் இருப்பது உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்தியோகம்

பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதிலும் திறம்பட செயல்பட முடியும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலையிருப்பதால் லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் புதிய ஆடர்கள் கிடைத்து லாபத்தை அடைய முடியும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை பெறுவீர்கள் என்றாலும் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும்.

அரசியல்

பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகுவதால் அவர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும் என்றாலும் கவனத்துடன் பேசுவது நல்லது. கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பத்திரிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்களிடம் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

கலைஞர்கள்

மக்களின் ஆதரவும், ரசிகர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொண்டால் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும். வர வேண்டிய பணத்தொகைகள் தக்க நேரத்தில் கைக்கு கிடைக்கும். கடந்த கால கடன்களை பைசல் செய்வீர்கள். படப்பிடிப்பிற்காக செல்லும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கார், பங்களா போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பொன் பொருள் சேரும். தாய் வழி சொத்துக்களால் அனுகூலப்பலன்களை பெற முடியும்.

மாணவ மாணவியர்

கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக வெளியூர் செல்வீர்கள். நல்ல நட்புகளால் அனுகூலப்பலன் உண்டாகும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளைப் பெறுவார்கள். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை, தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை போன்ற யாவும் விலகும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 4,5,6,7,8 நிறம் – வெள்ளை, பச்சை கிழமை – வெள்ளி, புதன்
கல் – வைரம் திசை – தென் கிழக்கு தெய்வம் – லக்ஷ்மி

பரிகாரம்

துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 12-ல் சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

உங்களுக்கு 01-05-2024 முதல் குரு 8-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணியவும் அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும்.

 

விருச்சிகம் ( விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை )

அதிக புத்திக்கூர்மையும், சமூகப் பற்றும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6, 12-ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகங்கள் தற்போது ஏற்படும் ராகு- கேது பெயர்ச்சி மூலம் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை (வாக்கியப்படி 08-10-2023 முதல் 26-04-2025 வரை) உங்கள் ராசிக்கு பஞ்சமஸ்தானமான 5-ல் ராகு, லாப ஸ்தானமான 11-ல் கேது சஞ்சாரம் செய்ய உள்ளதால் நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய நற்பலன்களை அடைய முடியும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது மிக மிக நல்லது. பூர்வீக சொத்து வழியில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் பங்காளியிடம் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது முடிந்தவரை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரித்து அர்தாஷ்டமச்சனி நடப்பதால் தேவையற்ற அலைச்சல், அதிகப்படியான வேலைப்பளு காரணமாக ஓய்வு நேரம் குறைய கூடிய அமைப்பு, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய ஒரு சூழல் உண்டு.

கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகமாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களின் பண வரவுகள் மிகச் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாக கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. பொருளாதார நெருக்கடி இருந்தாலும் தக்க நேரத்தில் ஏதாவது எதிர்பாராத உதவிகள் கிடைத்து நிலைமையை சமாளிக்க முடியும்.

தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் யோசித்து செயல்பட்டால் நீங்கள் போட்ட முதலீடுகளை எடுக்க முடியும். கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் சூழலுக்கு ஏற்றவாறு நடந்து கொண்டால் எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. குறிப்பாக ஒவ்வொரு காரியத்திலும் நீங்களே நேரடியாக செயல்பட்டால் தான் அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. சூழ்நிலை காரணமாக உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் அதன் காரணமாக குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பணி நிமித்தமாக மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும்.

உங்கள் ராசிக்கு 2, 5-க்கு அதிபதியான குரு பகவான் தற்போது கோச்சார ரீதியாக ருண, ரோக ஸ்தானமான 6-ல் 01-05-2024 முடிய சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத்தோடு இருப்பது, அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது, சுப காரிய விஷயங்களை சற்று தள்ளிப் போடுவது நல்லது.

வரும் 01-05-2024-ல் ஏற்படக்கூடிய குரு பெயர்ச்சியின் மூலம் குரு உங்கள் ராசிக்கு சம சப்தமான ஸ்தானமான 7-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்கள் வாழ்வில் ஒரு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். பணவரவுகள் மிக மிக நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.

பிள்ளைகள் வழியில் இருந்து வந்த மன கவலைகள் எல்லாம் முழுமையாக மறைந்து மன மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த கடன் தொல்லைகள் எல்லாம் விலகி சேமிக்க கூடிய அளவிற்கு ஒரு சில சாதகமான பலன்கள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாட பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் தேவையற்ற கவலை தரும் நிகழ்வுகள் நடக்கும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, மருத்துவ காப்பீடு எடுத்து கொள்வது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களிடம் பேசும் போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்றவர்களும் ஒன்று சேருவார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் 01-05-2024-க்கு பிறகு எளிதில் கைகூடி நல்லது நடக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் விரைவில் சிறப்பான பண வரவை அடைவீர்கள். பூர்வீக சொத்துக்கள் ரீதியாக சிறிது மன நிம்மதி குறைவு ஏற்படும்.

உத்தியோகம்

பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் உங்களது உடல் நிலை ஒத்துழைக்காது. எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் 2024 மே மாதத்திற்கு பிறகு கிடைக்கும். பொருளாதார ரீதியாக தேக்க நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளு குறையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்போது பயன்படுத்தி கொண்டால் விரைவில் மிகவும் உயர்வான நிலையை அடைய முடியும்.

தொழில் வியாபாரம்

செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் உங்களது உழைப்பு சற்று அதிகமாக இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சினைகளை சமாளிக்க முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலம் ஏற்படும். போட்டி பொறாமைகளால் மனநிம்மதி குறையும். நவீன கருவிகள் வாங்குவதற்காக கடன் வாங்க நேரிடும். அதிக முதலீடு விஷயத்தில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தற்போது சற்று பொறுமையுடன் இருந்தால் 2024 மே மாதத்திற்கு பின்பு தொழிலில் நல்ல முன்னேற்றங்களை அடையலாம்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் 2024 மே மாதத்திற்கு பிறகு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்பட்டு உங்கள் வாழ்க்கை தரம் உயரும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைவீர்கள். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனத்துடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை காண முடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்ற விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வம்பு வழக்குகளில் சற்று இழுபறி நிலை நீடித்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

 

அரசியல்

மேலிடத்தில் உள்ளவர்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் பெயர் புகழுக்கு பங்கம் ஏற்படாது. மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடை பேச்சுகளில் நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்

உழைப்பு அதிகமாக இருந்தாலும் அதற்கேற்றபடி பயிர் விளைச்சல் இருக்கும். போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்து சென்றால் அவர்களது ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் தக்க நேரத்தில் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் பங்காளிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம் என்பதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

கலைஞர்கள்

கிடைத்த வாய்ப்புகளை கைநழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தற்போது ஏற்ற இறக்கமாக இருந்தாலும் 2024 மே மாதத்திற்கு பிறகு மிகவும் சிறப்பாக இருக்கும். சுக வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். தடைபட்ட திருமண சுப காரியங்கள் 01-05-2024-க்கு பிறகு சுலபமாக கைகூடும். புத்திர வழியில் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். பண வரவுகள் தக்க நேரத்தில் கிடைப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். முன் கோபத்தை குறைத்துக் கொண்டு உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

மாணவ மாணவியர்

கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். நல்ல நட்புகளால் பல நன்மைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் நற்பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9 நிறம் – ஆழ்சிவப்பு, மஞ்சள் கிழமை – செவ்வாய், வியாழன்
கல் – பவளம், திசை – தெற்கு தெய்வம் – முருகன்

பரிகாரம்

விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 5-ல் ராகு சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது. கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

சனி 4-ல் சஞ்சரிப்பதால் சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவது நல்லது. சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, கருப்பு நிற ஆடை அணிவது நல்லது.

வரும் 01-05-2024 முடிய குரு 6-ல் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றுவது, வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்வது உத்தமம்.

 

தனுசு ( மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

சுயநலம் இன்றி பிரதிபலன் எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5, 11-ல் சஞ்சரித்த நிழல் கிரகங்கள் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை (வாக்கியப்படி 08-10-2023 முதல் 26-04-2025 வரை) உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் வீட்டில் ராகு, தொழில் ஸ்தானமான 10-ம் வீட்டில் கேது சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வு நேரம் குறைய கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும்.

பல்வேறு பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். மற்றவர்கள் செய்ய வேண்டிய பணியும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். வண்டி வாகனங்கள் மூலமாக சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய ஒரு சூழல் தற்போது இருக்கிறது. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது.

சர்ப்ப கிரகங்கள் கேந்திரங்களில் சஞ்சரிப்பது உங்களுக்கு ஒரு சில நெருக்கடிகளை தந்தாலும் ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது ஒரு சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுக்கு பண வரவுகள் மிகச் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாக கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரம் மிகச் சிறப்பாக இருந்து உங்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் நல்ல லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

புதிய திட்டங்களை போட்டு சந்தையில் ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களை தற்போது பைசல் செய்ய முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் நன்றாக இருக்கும். வாடிக்கையாளர்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்து புதிய கிளைகளை நிறுவக்கூடிய ஒரு வாய்ப்புகள் ஏற்படும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த தொழில் நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து மிகவும் சாதகமான பலன்களை பெறுவீர்கள். ஒரு சிலர் அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பினை பெறுவார்கள்.

உங்கள் ராசிக்கு அதிபதியான குரு 01-05-2024 முடிய பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். இதுநாள் வரை குரு- ராகு இணைந்திருந்ததால் ஒரு சில தேவையற்ற இடையூறுகளை சந்தித்தீர்கள், தற்போது குருவை விட்டு ராகு விலகி விட்டதால் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்து வகையில் கூட ஒரு சில சாதகமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள், கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் குறைய கூடிய நிலை வரும் நாட்களில் ஏற்படும். உடல் ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் கூட ஓரளவுக்கு விலகி எதிலும் தெம்போடும் சுறுசுறுப்போடும் செயல்படுவீர்கள்.

5-ல் சஞ்சரிக்க கூடிய குரு பகவான் 01-05-2024 முதல் 6-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் குரு மாற்றத்திற்குப் பிறகு பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு செயல்பட்டால் ஒரு வளமான பலன்களை அடைய முடியும். குரு 6-ல் சஞ்சரிக்க கூடிய காலத்தில் சனி மிக மிக சாதகமாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ள கூடிய ஒரு பலமும் வலிமையும் நீங்கள் பெறுவீர்கள். ஒரு சில நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உங்கள் தனித் திறமையால் அனைத்தையும் சமாளிக்க கூடிய பலமும் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடையக்கூடிய ஒரு யோகமும் உங்களுக்கு உண்டு.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள். உடற்பயிற்சி செய்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது உத்தமம். தேவையற்ற மனக்குழப்பங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் உங்களது அனைத்து தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். ஆடம்பரமான வாழ்க்கை ஏற்படும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சுபகாரிய முயற்சிகளில் வரும் நாட்களில் நற்பலன் கிடைக்கும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலைபளு காரணமாக உடல் அசதி இருந்தாலும் கௌரவ பதவிகளை அடைய முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். பொருளாதாரநிலை மிக சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் சிறப்பாக முடிக்க முடியும். உயர் அதிகாரிகள் ஆதரவால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வரும் நாட்களில் சிறப்பாக வாய்ப்புகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறைந்து படிபடியான முன்னேற்றம் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் நீங்கள் அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் சாதிக்கும் யோகம் உண்டாகும். கூட்டாளிகள் ஆதரவு சற்று சுமாராக இருக்கும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வெளியூர், வெளிநாடு மூலம் எதிர்பார்க்கும் லாபம் ஓரளவுக்கு கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் பொருளாதார அனுகூலம் உண்டு.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகள் சிறப்பாக இருக்கும் காலம் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நற்பலனை அடைய முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இழுபறி நிலை நிடித்தாலும் தக்க நேரத்தில் திரும்பி வரும். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதில் சிந்தித்து செயல்பட்டால் நற்பலன் கிடைக்கும். உடன் இருப்பவர்களை சற்று அனுசரித்து சென்றால் எந்த நெருக்கடிகளும் இன்றி அன்றாட செயல்களை செய்ய முடியும்.

அரசியல்

மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் உண்டாவதால் அவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். நீங்கள் எதிர்பார்க்கும் கௌரவ பதவிகள் தேடி வரும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும்- என்றாலும் பணவரவுகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உடன் பழகுபவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்து சந்தையில் விளை பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்கும். காய், கனி, பூ போன்றவற்றாலும் கால் நடைகளாலும் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். சில இடங்களில் நீர் வரத்து குறைந்தாலும் புதிய யுக்தியை பயன்படுத்தி உங்களது விவசாய பணிகளை சிறப்பாக செய்வீர்கள். அரசு வழியில் மானிய உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் கூலி ஆட்கள் ஒத்துழைப்பு நன்றாக இல்லாத காரணத்தால் உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு ஏற்படும். வரவேண்டிய பணத் தொகைகள் தக்க நேரத்தில் கிடைப்பதால் கடந்த கால கடன்கள் பைசல் ஆகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். சுகபோக வாழ்வை அனுபவிக்க இடையூறு ஏற்படும். இசைத் துறைகளில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும்.

பெண்கள்

உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் நல்ல செய்தி கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பதால் அவர்கள் மூலம் ஓரளவுக்கு ஆதாயப்பலனை அடைய முடியும்.

மாணவ மாணவியர்

கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புக்களால் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுவது உத்தமம். கல்வி ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9, நிறம் – மஞ்சள், பச்சை கிழமை – வியாழன், திங்கள்
கல் – புஷ்ப ராகம் திசை – வடகிழக்கு தெய்வம் – தட்சிணா மூர்த்தி

பரிகாரம்

தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது. அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
குரு உங்கள் ராசிக்கு வரும் 01-05-2024 முதல் 6-ல் சஞ்சரிப்பதால் குருவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது நல்லது.

மகரம் ( உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்)

நண்பர்களிடமும் விரோதிகளிடமும் சகஜமாகப் பழகக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை நிழல் கிரகமான ராகு 4-லும், கேது 10-லும் சஞ்சாரம் செய்வதால் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது.

தற்போது ஏற்பட உள்ள ராகு கேது மாற்றத்தால் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை (வாக்கியப்படி 08-10-2023 முதல் 26-04-2025 வரை) உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3—ம் வீட்டில் ராகு, பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் கேது சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும்.

எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் பரிபூரண வெற்றியினை பெறுவீர்கள். உங்களுடைய எண்ணங்கள் நிறைவேற கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் விலகி மன அமைதி தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு வெளியூர் பயணங்களும் அதன் மூலம் சாதகமான பலன்களும் உண்டாகும். அன்றாட செயல்களில் மிகத் திறமையாக செயல்பட்டு பொருளாதார அனுகூலங்களை பெறுவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த வீண் செலவுகள் தற்போது குறையும்.

மனைவி, பிள்ளைகளிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் எல்லாம் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள் கூட தற்போது உங்களிடம் சுமூகமாகவும் நட்புடனும் பழகக் கூடிய ஒரு நிலை உண்டாகும்.

உங்கள் ராசியாதிபதி சனி 2-ல் சஞ்சரித்து தற்போது ஏழரைச் சனியில் பாதச் சனி நடைபெறுவதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது, நெருங்கியவர்களிடம் பேசுகின்ற போது சற்று நிதானத்தோடு இருப்பது உத்தமம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிக மிக நல்லது. குடும்பத்தில் வயதில் மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு உங்கள் பணியில் மட்டும் நீங்கள் கவனத்தோடு இருந்தால் வளமான பலன்களை பெறலாம்.

உங்கள் ராசிக்கு 3, 12 அதிபதியான குரு வரும் 01-05-2024 முடிய சுகஸ்தானமான 4-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது அவ்வளவு விசேஷமான அமைப்பு என கூற முடியாது. இதனால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது, தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது.

வரும் 01-05-2024 முதல் குரு பஞ்சமஸ்தானமான 5-ல் சஞ்சாரம் செய்ய இருக்கின்ற காலத்தில் உங்கள் வாழ்வில் ஒரு மிகப்பெரிய மாற்றமும், பொருளாதார ரீதியாக அனுகூலங்களை பெறக்கூடிய யோகமும் ஏற்படும். சுப காரிய முயற்சிகளை தற்போது நீங்கள் மேற்கொண்டால் மே மாதத்திற்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும்.

தொழில் வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றத்தையும் புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய அதிர்ஷ்டங்களும் ஏற்படும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய மனக்கவலைகள் எல்லாம் வருகின்ற நாட்களில் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு விரைவில் எதிர்பார்த்த இடமாற்றமும், உங்கள் திறமைக்கேற்ற பணிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும்.

சக ஊழியர்கள் உங்களுக்கு ஏற்படுத்திய இடையூறுகள் எல்லாம் தற்போது முழுமையாக குறைவதால் பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்பும் அதிர்ஷ்டமும் உண்டாகும். கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டாகும். குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையோடு செயல்பட்டால் வரும் நாட்களில் மிகச் சிறப்பான பலன்களையும், முன்னேற்றத்தையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி, பிள்ளைகள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் கைகூடுவதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுப காரியங்கள் தற்போது தடைப்பட்டாலும் 2024 மே மாதத்திற்கு பிறகு எளிதில் கைகூடும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும்.

உத்தியோகம்

பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களை அடைய முடியும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் 2024 மே மாதத்திற்கு பிறகு கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் சிறப்பான நிலைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தி பெருகும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. 2024 மே மாதத்திற்கு பிறகு தற்போது உள்ள நெருக்கடிகள் பெரும் அளவு குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சாதகமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்கள் சற்று தாமதமாக வசூலாகும். பெரிய தொகைகளை கையாளும் போது சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய அனுகூலத்தை அடைய முடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் 2024 மே மாதத்திற்கு பிறகு முடிவுக்கு வரும்.

அரசியல்

பெயரும், புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகளில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும் என்பதால் சிக்கனமாக செலவு செய்யவும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும். பத்திரிக்கையாளர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி, நிலம், மனை போன்றவற்றை வாங்கும் யோகம் 2024 மே மாதத்திற்கு பிறகு உண்டு. பங்காளிகளிடம் சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. கால் நடைகளால் எதிர்பாராத செலவுகளை எதிர் கொள்வீர்கள். கடன் சுமைகள் குறையும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கைக்கு வராமல் தடைபட்டு கொண்டிருந்த பணத்தொகைகள் தடையின்றி வந்து சேரும். சுகவாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், வீடு போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். இசை துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் ஏற்படும். கடன்களும் படிபடியாக குறையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் கடந்த காலங்களில் இருந்த பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு 2024 மே மாதத்திற்கு பிறகு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

மாணவ மாணவியர்

நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். கல்விக்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலன்கள் ஏற்படும். படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,8 நிறம் – நீலம், பச்சை கிழமை – சனி, புதன்
கல் – நீலக்கல் திசை – மேற்கு தெய்வம் – விநாயகர்

பரிகாரம்

மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி 2-ல் சஞ்சரித்து ஏழரைச்சனியில் பாதச்சனி நடைபெறுவதால் சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவது நல்லது. சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கருப்பு நிற ஆடை அணிவது நல்லது.

குரு உங்களுக்கு வரும் 01-05-2024 முடிய 4-ல் சாதகமின்றி சஞ்சரிப்பதால் குருவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள குருவிற்கும், தட்சிணாமூர்த்திக்கும் கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்வது நல்லது.

 

கும்பம் ( அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள் )

உயர்ந்த பண்பும், நிறைந்த பொறுமையும், எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடிய தன்மையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை 3, 9-ல் சஞ்சரித்த ராகு, கேது தற்போது ஏற்படும் மாறுதலால் திருக்கணிப் பஞ்சாங்கப்படி வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை (வாக்கியப்படி 08-10-2023 முதல் 26-04-2025 வரை) உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானமான 2-ல் ராகு, ஆயுள் ஆரோக்கிய ஸ்தானமான 8-ல் கேது சஞ்சாரம் செய்ய உள்ளதாலும், ஜென்ம ராசியில் சனி சஞ்சரித்து ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடப்பதாலும் நீங்கள் எதிலும் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது.

உங்களது உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் ஆகும். உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடு இருக்க வேண்டும். கணவன்- மனைவியிடையே கருத்து வேற்றுமை ஏற்படக்கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடையே தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது, குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஒரு சிறு பாதிப்பு என்றாலும் உடனடியாக அதற்கு மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொண்டால்தான் வீண் செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும். மனைவி, பிள்ளைகளுடைய ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.

தொழில் வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான லாபத்தை அடைய தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். போட்ட முதலை எடுக்க எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். உங்கள் பொருட்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த விலை கிடைக்காது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது மிக மிக நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் வேலைபளு சற்று கடுமையாக இருக்கும்.

அதிகாரிகளுடைய ஆதரவானது அவ்வளவு சிறப்பாக இருக்காது. உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மீது வீண் பழிச்சொற்களைச் சொல்லக்கூடிய நேரம் என்பதால் ஒவ்வொரு காரியத்திலும் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். குறிப்பாக ஒரு சிலர் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி உங்களுக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளை தவற விட்டுவிட வேண்டாம். தற்போது நீங்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் நிலைமையை சமாளித்து ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். சுப காரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும்.

தனக்காரகன் குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் 01-05-2024 முடிய 3-ல், அதன் பிறகு 4-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது அவ்வளவு சிறப்பான அமைப்பு இல்லை. அதனால் பண விஷயத்தில் மிகவும் சிக்கனத்தோடு இருக்க வேண்டும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

2024 மே மாதத்திற்கு பிறகு குரு 4-ல் சஞ்சாரம் செய்யும் போது பொருளாதார ரீதியாக ஒரு சில முன்னேற்றங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வண்டி, வாகனங்கள் மூலமாக வீண் செலவுகள், வீடுகளை பழுது பார்ப்பதற்காக எதிர்பாராத வகையில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை வருகின்ற நாட்களில் ஏற்படலாம். பூர்வீக சொத்து வகையில் தேவையில்லாத பிரச்சினைகள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு தேவையற்ற அலைச்சல் சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஒவ்வொரு காரியத்திலும் பக்குவமாக நடந்து கொள்வது, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிதானத்தோடு இருப்பது மிகவும் நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள், அலர்ஜி பாதிப்புகள் ஏற்படலாம் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சில நேரங்களில் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது, மருத்துவ காப்பீடு எடுத்து கொள்வது நல்லது. முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் பொறுமையை கடைபிடிப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே தேவையற்ற பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுபகாரியங்கள் கைகூடும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு அழகிய குழந்தை கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் கிடைக்கும்.

உத்தியோகம்

செய்யும் பணியில் சில நிம்மதி குறைவுகளை சந்திக்க நேர்ந்தாலும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு வெளியிடங்களில் தங்கி பணிபுரிய நேரிடும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபங்களை பெற முடியும். வேலையாட்களால் சிறிது தொந்தரவு ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்க முடியும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்பட்டால் நற்பலன் கிடைக்கும். கடன்கள் ஒரளவுக்கு குறையும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த பணத்தை வசூல் செய்வதில் உடன் இருப்பவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படும். உங்களுக்கு உள்ள கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கடந்த காலங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வரும். உற்றார் உறவினர்கள் பண விஷயத்தில் சிறிது நெருக்கடிகளை உண்டாக்குவார்கள் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது.

அரசியல்

மக்களின் ஆதரவை நீங்கள் பெற முடியும். பெயர், புகழ், கௌரவ பதவிகள் தேடி வரும். பேச்சால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் எது பேசுவது என்றாலும் சிந்தித்து பேசினால் நற்பலனை அடைய முடியும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகள் எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் இருந்தாலும் உடல் நிலையில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் நன்றாக இருந்தாலும் அதற்கேற்ற நல்ல விலை சந்தையில் கிடைக்க உடன் இருப்பவர்களே இடையூறாக இருப்பார்கள். பங்காளிடம் பேச்சில் கவனத்துடன் இருப்பதும், வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. புதிய நவீன கருவிகளை வாங்குவதற்காக கடன் வாங்க நேரிடும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. காய், கனிகளாலும், கால்நடைகளாலும் லாபத்தை அடைய முடியும்.

கலைஞர்கள்

உங்கள் உழைப்பிற்கான பலனை பெற முடியும். உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் செயல்பாடுகளால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். வரவேண்டிய பணத்தொகைகள் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்து உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். இழந்தவற்றை மீட்க கூடிய ஆற்றல் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சல்கள் இருந்தாலும் அதனால் ஆதாயம் இருக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்க முடியும். மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, கணவர் வழி உறவினர்களிடம் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகள் அற்புதமாக இருப்பதால் நவீன பொருட்களை வாங்குவீர்கள். தாய் வழி சொத்துகளால் நற்பலன் கிடைக்கும்.

மாணவ மாணவியர்

கல்வியில் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றாலும் உடல் சோர்வு ஏற்படும். பெற்றோர், ஆசிரியர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்த்தால் நற்பெயர் எடுக்க முடியும். உங்கள் தனி திறமைகளை வெளிகாட்டி பரிசுகளையும், பாராட்டுதல்களையும் தட்டி செல்வீர்கள். வண்டி, வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,8, கிழமை – வெள்ளி, சனி திசை – மேற்கு
கல் – நீலக்கல் நிறம் – வெள்ளை, நீலம் தெய்வம் – ஐயப்பன்

பரிகாரம்
கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

குரு சாதகமற்று 3, 4-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணிவதும். குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும்.

ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெறுவதால் சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவது நல்லது. திருப்பதி ஏழு மலையில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதியை வழிபடுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, கருப்பு நிற ஆடை அணிவது நல்லது.

 

மீனம் ( பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி )

எப்பொழுதும் கலகலப்பாகப் பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை 2, 8-ல் சஞ்சரித்த ராகு, கேது தற்போது ஏற்படும் ராகு-கேது பெயர்ச்சியால் திருக்கணிப்படி வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை (வாக்கியப்படி 08-10-2023 முதல் 26-04-2025 வரை) ஜென்ம ராசியில் ராகு, களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் கேது சஞ்சாரம் செய்ய இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல்பட வேண்டும். ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி பகவான் தற்போது விரைய ஸ்தானமான 12-ல் அமையப்பெற்று உங்களுக்கு ஏழரைச் சனியில் விரையச் சனி நடப்பதும் அவ்வளவு சிறப்பான அமைப்பு அல்ல.

ஜென்ம ராசியில் ராகு சஞ்சாரம் செய்ய இருப்பதால் சில நேரங்களில் உங்கள் நிதானத்தை இழக்க நேரிடும் என்பதால் எதை செய்வதென்றாலும் யோசித்து செய்வது நல்லது. உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்பட்டால் தான் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

புதிதாக திருமணமான புதுமண தம்பதிகள் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, உறவினர்களை அனுசரித்து செல்வது, மற்றவரிடம் பேசுகின்ற போது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக அலர்ஜி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், உணவு ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. மனைவி, பிள்ளைகளுடைய ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.

அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று பொறுமையோடு இருப்பது மிக மிக நல்லது. ஒரு சிலருக்கு பெற்றோர் வழியில் வீண் மருத்துவ செலவுகள் ஏற்படலாம் பொதுவாக எதிர்பாராத மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள மருத்துவ காப்பீட்டுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

இந்த தருணத்தில் உங்கள் ராசியாதிபதி குரு தன ஸ்தானமான 2-ம் வீட்டில் 01-05-2024 முடிய சாதகமாக சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் மே மாதம் வரை பண வரவுகள் சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பு, உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தியாக கூடிய அமைப்பு, குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூட கூடிய ஒரு வாய்ப்புகள், வியாபாரத்தில் நல்ல லாபங்களை ஈட்டக்கூடிய ஒரு யோகம், தொழிலில் ஒரு நல்லதொரு வாய்ப்புகள் கிடைத்து அதன் மூலம் ஒரு பொருளாதார அனுகூலங்களை அடையக் கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.

தனிப்பட்ட முறையில் சில நெருக்கடி இருந்தாலும் பொருளாதாரம் நன்றாக இருப்பதால் பல்வேறு அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும்.

வரும் 01-05-2024 முதல் குரு பகவான் 3-ல் சஞ்சரிக்க கூடிய காலத்தில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, ஒவ்வொரு காரியத்திலும் யோசித்து செயல்படுவது, எதிலும் அகல கால் வைக்காமல் சிக்கனமாக இருப்பது மிகவும் நல்லது. குறிப்பாக மே மாதத்திற்கு பிறகு பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருப்பதால் நீங்கள் சூழலுக்கு ஏற்றவாறு மிகவும் கவனத்தோடு இருந்தால்தான் நிலைமையை சமாளித்து ஒரு சில வளமான பலன்களை நீங்கள் பெற முடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. உங்களின் விடா முயற்சியால் எதையும் எதிர்கொள்வீர்கள். எந்தவொரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் உடல் சோர்வு ஏற்படும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். தூர பயணங்கள் உங்களுக்கு அலைச்சலை தந்தாலும் அதனால் பொருளாதார அனுகூலங்கள் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

பண வரவுகள் சாதகமாக இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்கு பின்பு நற்பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் எதிலும் திறமையுடன் செயல்பட முடியும் என்றாலும் அதற்கான சன்மானம் குறைவாக கிடைக்கும். வேலைபளு அதிகரிப்பதால் உடல் அசதி ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகள் மே 2024-க்குள் கிடைக்கும் என்பதால் வரும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானமாக இருந்தால் நல்ல நிலையை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் பிறர் செல்லும் வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் உயர்வான நிலையை அடைவதற்கான சூழ்நிலை அமையும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு 2024 மே மாதத்திற்குள் ஒரு சில அனுகூலமான பலன்களை அடையும் யோகம் உண்டு. கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் தவற விடாமல் தக்க வைத்து கொள்வது நல்லது. போட்டிகள் அதிகமாக இருப்பதால் எதிலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வளமான பலனை அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதும் அவர்களை கலந்தாலோசித்து எந்த முடிவுகளையும் எடுப்பதும் நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குரு 2-ல் 2024 மே மாதம் வரை இருப்பதால் எதிர்பாராத பண வரவுகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் குடும்பத்திற்கு தேவையான நவீன பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் கடன் பிரச்சினைகளை குறைத்து கொள்ள முடியும், 2024 மே மாதத்திற்கு பிறகு பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் மேன்மைகள் உண்டாகும். கொடுத்த பணத்தை வசூலிக்க இடையூறுகள் ஏற்படும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் அனுகூலங்கள் கிடைக்கும். முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

அரசியல்

உங்கள் முன் கோபத்தை குறைத்து கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பத்திரிக்கை நண்பர்களை அனுசரித்து செல்வது உத்தமம். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைப்பதால் கௌரவ பதவிகள் உங்களை தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயர் எடுப்பீர்கள். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்வதால் உங்கள் கையிருப்பு குறையும். தூர பயணங்கள் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் நன்றாக இருந்து அதற்கான விலையை வரும் நாட்களில் பெறுவீர்கள். உழைப்பிற்கு ஏற்ற லாபத்தை பெற தடங்கல்கள் உண்டாகும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டாலும் எதையும் தனித்து நின்று சமாளித்து விடுவீர்கள். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். பங்காளிகளிடம் பேச்சை குறைக்கவும். விவசாய நிலத்தில் முதலீடு செய்யும் விஷயத்தில் யோசித்து செயல்படுவது நல்லது.

கலைஞர்கள்

எதிலும் திறமையுடன் செயல்படுவீர்கள் என்றாலும் போட்டிகள் காரணமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்க இடையூறுகள் ஏற்படும். ரசிகர்களின் ஆதரவுகள் குறையாமல் இருப்பதால் எதிலும் உற்சாகத்துடன் ஈடுபட முடியும். வெளியூர் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் அதனால் அலைச்சல் ஏற்படும். பத்திரிக்கைகளில் வரும் கிசுகிசுக்களால் மனநிம்மதி குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் ஓரளவுக்கு சுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண சுபகாரியங்கள் விரைவில் கைகூடி மன மகிழ்ச்சி ஏற்படும். உடன் இருப்பவர்களே சில இடையூறுகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது.

மாணவ மாணவியர்

கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுப்பீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். தேவையற்ற பொழுது போக்குகளால் மனம் வேறுபாதைகளுக்கு மாறிச் செல்லும். போட்டி தேர்வுகளில் சற்று கவனமுடன் செயல்படுவதும், உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வதும் நல்லது. கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9, கிழமை – வியாழன், ஞாயிறு திசை – வடகிழக்கு
கல் – புஷ்ப ராகம் நிறம் – மஞ்சள், சிவப்பு தெய்வம் – தட்சிணாமூர்த்தி

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

01-05-2024 முதல் குரு உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணிவதும். குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *