V. Senthil Balaji: ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல்!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல்!

பண பரிமாற்ற வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஏற்கனவே 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையிட்டார். அதனை ஏற்று  நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் நாளை விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *