Southern Railway Headquarters: புறநகர் ரயில் சேவை ரத்து

சென்னை புறநகர் ரயில் சேவை  நாளையும் ரத்து; ரயில்வே கோட்ட  நிர்வாகம் அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை  உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மழை நீரால் சூழ்ந்து, சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுமட்டுமல்லாமல் ரயில் செல்லக்கூடிய தண்டவாளங்களிலும் தண்ணீர் நிறைந்துள்ளது. தண்ணீர் முழுவதுமாக வடிந்தால் மட்டுமே ரயில் சேவை தொடங்கப்படும் என்று  தெற்கு ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் கன மழையின் காரணமாக தண்ணீர் அதிக அளவு தேங்கியுள்ளது. இதனால் சாலைகளில் மட்டுமல்லாது ரயில்கள் செல்லும் தண்டவாளங்களில் கூட தண்ணீர் ஆறு போல் ஓடுவதால்  ரயில் சேவை மூன்றாவது நாளாக ரத்து செய்து தெற்கு ரயில்வே கோட்ட நிர்வாகம் நாளை அதாவது டிசம்பர் 6-ஆம் தேதியன்றும் ரயில் சேவை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மீண்டும் ரயில் சேவை ஆரம்பமாகும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் முற்றிலுமாக மழை நீர் வற்றினால் மட்டுமே ரயில் சேவையைத் தொடர முடியும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *