
மோடியின் தோல்வி பயம் அவர் முகத்திலேயே தெரிகிறது என்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனத் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பயண்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள் குரோம்பேட்டையில் உள்ள எம் ஐ டி கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதைத் திமுக அமைப்புச் செயலாளர் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் டி ஆர் பாலுவின் தலைமை முகவர் ஆர் எஸ் பாரதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குச் சென்று அதன் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தமிழகத்தில் அதிக வாக்குகள் பெற்று திமுக வெற்றி பெறும் தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் அமையும் என்றார். இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது காவல்துறையினர் நடுநிலைமையுடன் நேர்மையுடன் நடந்து கொள்கின்றனர். இந்திய கூட்டணி ஆட்சியை அமைக்கும் மோடி பலமுறை தமிழக வந்துள்ளார். பலமுறை பார்த்திருப்போம் ஆனால் தற்போது அவர் முகத்தில் தோல்வியின் பயம் தெரிகிறது. தோல்வி பயத்தால் மதசார்பற்ற நாட்டில் இஸ்லாமியர்களைப் பற்றி இழிவாகப் பேசிக் கலவரத்தைத் தூண்டி தேர்தலை நிறுத்தப் பார்க்கிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது மோடியின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாத பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம் தினம் தினம் மாற்றி மாற்றிப் பேசுபவர் தான் மோடி சுதந்திர இந்தியா வரலாற்றில் இதுவரை இப்படியொரு பிரதமரை நாங்கள் பார்க்கவில்லை.
கடந்த தேர்தலைவிட உத்தரபிரதேச ம் பீகார் மகாராஷ்டிரா குஜராத் டெல்லி போன்ற பகுதிகளில் பாஜக கடந்த தேர்தலைவிடக் குறைவான இடங்களிலேயே வெற்றி பெறும் சுமார் 116 முதல் 150 இடங்களில் மட்டுமே பிஜேபியை கைப்பற்றும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்,
தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து தொகுதிகளில் திமுகவே வெல்லும் பிஜேபி கூட்டணி எத்தனை இடத்தில் டெபாசிட் பெற போகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நாலு கோடி ரூபாய் விவகாரத்தில் ஈடி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆனால் இதோடு குறைந்த அளவை பணம் கொண்ட செந்தில் பாலாஜி வழக்கில் மாதக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், ஜூன் 6-க்கு பின்பு முறையாக நடவடிக்கை எடுக்காத அதிகாரியின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார், அவர் வாக்கு மையத்தை ஆய்வு செய்தபோது பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ .கருணாநிதி மண்டல குழுத் தலைவர் ஜோசப் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்,


