தனிநபர் சராசரி வருமானத்தில் தமிழ்நாடு இரண்டாமிடம்..!

தனிநபர் வருமானத்தில் தேசியச் சராசரியை விஞ்சியுள்ளதாகவும், அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சியுள்ளதாகவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசின் எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியுள்ள செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார். தமிழ்நாடு ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 309 ரூபாய் என்ற தனிநபர் வருமானக் குறியீட்டின் மூலம் இந்திய மாநிலங்களில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக ஆட்சியின் இறுதியாண்டில் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ஒரு இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் சராசரியாக 8 புள்ளி ஒன்று ஐந்து விழுக்காடு அடைந்துள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் இறுதி நான்காண்டுகளில் 4 புள்ளி நான்கு இரண்டு விழுக்காடு மட்டுமே வளர்ச்சி இருந்ததாகவும் குறிப்பிடுடுள்ளார்.

தேசியச் சராசரி தனிநபர் வருமானம் ஒரு இலட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார். அடுத்து வரவுள்ள திமுக ஆட்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலமாக உயரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *