குறைந்த செலவில் வீட்டுவசதி திட்டம் அறிமுகம்.!

Advertisements

குறைந்த செலவில் வீட்டுவசதி அளிப்பதற்காக ஒரு டன் சிமென்ட் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குக் கொண்டுசெல்வதற்கான கட்டணத்தை 90 காசுகள் என்கிற திட்டம் ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நடுத்தரப் பிரிவினரும் வீடு கட்டும் செலவைக் குறைக்கும்ம் வகையில் சிமெண்டுக்கான சரக்குக் கட்டணத்தைக் குறைத்துள்ளதாகக் கூறினார்.

ஒரு டன் சிமெண்டை ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு எடுத்துச் செல்ல 90 காசுகள் என்கிற அளவுக்குக் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

பெருமளவில் சிமெண்ட் எடுத்துச்செல்லும் நிறுவனங்கள் ரயில்வேயின் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டார்.

சரக்குக் கட்டணம் குறைந்தால் சிமெண்ட் விலை குறையும் என்றும், இது வீடு கட்டும் செலவைக் குறைக்கும் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *