G20 Summit: கலாச்சார நடனத்துடன் பிரதமருக்கு வரவேற்பு!

டெல்லி விமான நிலையத்தில் கலாச்சார நடனத்துடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது…

ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது. இந்த நிலையில் நாளையும், நாளை மறுநாளும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.

 

இதனை முன்னிட்டு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர். டெல்லிக்கு வரும் சர்வதேச நாடுகளின் தலைவர்களை வரவேற்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி இன்று டெல்லி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவரை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே நேரில் சென்று வரவேற்றார்.

இத்தாலி பிரதமரை வரவேற்க விமான நிலைய வளாகத்தில் சிறப்பு கலாச்சார நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நடன நிகழ்ச்சியை ஜார்ஜியா மெலோனி பார்த்து ரசித்தார். பின்னர் நடன கலைஞர்களுடன் இணைந்து அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *