
தூய்மை பணியாளர் பத்மாவின் பாதம் தொட்டு வணங்கிய நடிகர் பார்த்திபன் செயல் அருகில் இருந்தவர்களின் காட்சிக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைத்தளப் பதிவில் தனியார் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதன் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதில், தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய்விடும் என்றும், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் உயிரிழக்கபடும் என்றார்.
துப்புரவு பணியாளர் பத்மா குப்பையில் கிடந்த 360 கிராம் தங்க நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருப்பதாகத் தெரிவித்தார். தன்னை சிறப்பு விருந்தினராக அழைத்த தனியார் கல்லூரிக்கு தான் வெறும் விருந்தினராகவும் அவரை சிறப்பு விருந்தினராகவும் அழைத்துச்சென்றிருக்க வேண்டும் என்றும் அவருக்கு கிரீடம் சூட்டி பேரழகன் ஆனேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நடிகர் பார்த்திபன் அவருக்கு பாதணி அணிவித்து காலில் விழுந்த செயல் அங்கிருந்தவர்களின் காட்சிக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


