Pushpa 2: The Rule: ராஷ்மிகா மந்தனாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு!

Advertisements

நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தன்னுடைய 28-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இவரின் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது, புஷ்பா 2 படக்குழு.

கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர், இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. புஷ்பா தி ரூல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், முதல் பாகத்தைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

‘புஷ்பா’ படத்தின் முதல் பாகமே 500 கோடி வசூலை தட்டி தூக்கிய நிலையில், இரண்டாம் பாகம் 1000 கோடி வசூல் செய்யும் அளவுக்குத் தரமான படைப்பாக இருக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. மேலும் முதல் பாகத்தில் புஷ்பாவாக நடித்த அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த தேசிய விருது இரண்டாம் பாகத்தில், அவருடைய நடிப்புத் திறனை மேலும் மெருகேற்றி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக உள்ள இந்தப் படத்தின் நாயகி,  நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தன்னுடைய 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இவருக்குப் பிறந்தநாள் பரிசாக, ஹாப்பி பர்த்டே ஸ்ரீவில்லியென டாக் லைன் இடம்பெற்ற போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இந்தப் போஸ்டரில் கண்ணில் கை வைத்த படி, கை நிறைய வளையல், கழுத்து நிறைய நகைகள், இரண்டு மூக்குத்தியோடு, பச்சை நிற புடவையில் இதுவரை யாரும் பார்த்திராத ட்ரெஷ்னல் கெட்டப்பில் ராஷ்மிகா மந்தனா உள்ளார். இந்தப் போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை மைத்ரேயி மூவிஸ் மிகவும் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து வருவது குறிபிடித்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *