
சர்வதேச விண்வெளி பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
‘நாசா’ மற்றும் இஸ்ரோ இணைந்து, ‘ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4’ என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப முடிவு செய்தது. இதில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் அமெரிக்காவிலிருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட் வாயிலாகச் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இன்று மாலை 5:30 மணிக்குப் புறப்பட இருந்தனர். இந்நிலையில் பால்கன் 9 ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதால் விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஏற்கனவே மோசமான வானிலை காரணமாகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் சர்வதேச விண்வெளிக்கான பயணம் தடைபட்டுள்ளது-. இருப்பினும் இந்தப் பயணம் நடைபெறும் பட்சத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைச் சுபான்ஷு சுக்லா பெறுவார் என்பது குறிப்பிட தக்கது.



