Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 06.04.2024

Advertisements

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது.  உங்கள் இலட்சியம்  நிறைவேறும். பணியில் முன்னேற்றம் காணப்படும். இதனால் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள்.  பணவரவு அதிகமாகக் காணப்படும். அதனைப் பயனுள்ள விஷயங்களுக்குச் செலவு செய்வீர்கள். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு  உகந்த நாளாக இருக்கிறது.  நம்பிக்கையாகச் செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்திப் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள்.  நிதிநிலைமை சாதகமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் பூர்விக சொத்திலிருந்து பணம் வரும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு  உகந்த நாளாக இருக்காது.  உங்கள் இலக்குகளை அடைய கடுமையாகப் போராட வேண்டும். முக்கியமாக, முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.  அதிக செலவுகள் காணப்படும். இதனால் கவலை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் பதட்டம் காரணமாகப் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு   சாதகமான நாளாக இருக்காது.  நீங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். மேலும், சக பணியாளர்களுடன் கவனமாகப் பழக வேண்டும். கணவன் மனைவி இருவரிடையே மோதல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.  கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களுக்கு  முன்னேற்றகரமான நாளாக இருக்கிறது. உங்கள் முயற்சிமூலம்  வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் கடினமான பணிகளைக் கூட எளிதில் செய்து முடித்து மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வும் அன்பும் அதிகரிக்கும்.  பணவரவு அதிகமாக இருக்கும். இதனால் சேமிப்பு உயரும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்கிறது. அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை அளிக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும்.  நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். கடின உழைப்பின் மூலம் ஊக்கத்தொகை பெறுவீர்கள். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

துலாம்

 

துலாம் ராசிக்காரர்களுக்கு  மந்தமான நாளாக இருக்கிறது. ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்படும். பணிகளைத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் பதட்டம் காரணமாகக் கால் வலி ஏற்ப்பட வாய்ப்புள்ளது.

 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு  சுமாரான நாளாக இருக்கிறது.நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். முறையாகத் திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் பணிகளை எளிதில் முடிக்கலாம். துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.  பணவரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கிறது.  நீங்கள் அனைத்திலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவும். துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.  சேமிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

மகரம்

 

மகரம் ராசிக்காரர்களுக்கு  உகந்த நாளாக இருக்காது.  முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. சக பணியாளர்களுடன் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். துணையுடன் குழப்பான உணர்வை வெளிப்படுத்துவீர்கள்.  தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கால் வலி அல்லது தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது.  உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். பிராத்தனை செய்வதன் மூலம் நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால், கவனமாகப் பணியாற்ற வேண்டும். துணையுடன் உணர்ச்சி வசப்படுவீர்கள்.  கவன குறைவால் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் பதட்டம் மற்றும் தொடை வலி ஏற்படும்.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு  மகிழ்ச்சியான  நாளாக இருக்காது.  உங்கள் இலக்குகளை அடைய முறையாகத் திட்டமிட வேண்டும். பணியிடத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அனுசரித்து போக வேண்டும். துணையிடம் முரண்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.  நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. கூடுதல் செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அதிக உழைப்பு காரணமாகக் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *