
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாகப் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை Dawn Pictures தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து பராசக்தி படக்குழு படத்தின் பிடிஎஸ் காட்சியை வெளியிட்டது.
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் டீசரை படக்குழு இன்று வெளியிட்டது.
பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் “தன் தனித்திறமையால் மக்களை மகிழ்விப்பதில் தம்பி சிவகார்த்திகேயன் காட்டும் உழைப்பும், சினிமாவின் மீதான அவரது காதலும் என்றென்றும் தொடரட்டும், வெற்றிகள் குவியட்டும் எனப் பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்”. எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் அமரன் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
