ஏஎஸ்பி பிருந்தாவின் அதிரடி சோதனை..!

புதுக்கோட்டையில் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு போதை மாத்திரைகளை கடத்த முயன்ற நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டையில் காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நான்கு பேர் அப்பகுதியில் 7 பெட்டிகளுடன் நின்று கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பெட்டியை சோதனை செய்ததில் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, போதை மாத்திரைகளை இலங்கைக்கு கடத்த முயன்ற இராமேஸ்வரத்தைச்  சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் , அமல்ராஜ் , பிரதாப், சந்தியா ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா செய்தியாளர்களிடம் பேசியபோது, சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கு போதை மாத்திரை எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய இரண்டு தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

பொதுமக்கள் இதுபோன்ற போதை மாத்திரைகள் கடத்தல் விற்பனைகள் குறித்து தெரிய வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *