
வாழப்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இரு பெண்கள் 20 அடி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெரிய கவுண்டாபுரத்தை சேர்ந்த கலையரசி,பார்வதி ஆகியோர் கட்டிட வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் கீழ் நாடு ஊராட்சியில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர் .
அப்போது, நாகலூர் சாலையில் இருந்து வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி சாலையோரம் உள்ள 20 அடி பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்தனர். இதில், இருவரும் தலைகுப்புற விழுந்ததில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த கருமந்துறை காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




