Kanyakumari : நடைப்பயிற்சி செய்யும் போது வாக்கு சேகரித்த ஸ்டாலின்.!

Advertisements

கன்னியாகுமரி மாவட்டத்துக்குத் தேர்தல் பரப்புரைக்காக வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டதுடன் கோவளத்தில் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார்.

கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ், நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்லச்சாமி, குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கப்பட், கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார், விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் ஆகியோரை ஆதரித்துத் தேர்தல் பரப்புரை செய்யக் கன்னியாகுமரி மாவட்டத்துக்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வந்துள்ளார்.

நேற்றிரவு கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் தங்கிய அவர், இன்று காலை கடற்கரைச் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து சாலையின் இருபுறமும் நின்ற  பொதுமக்களைச் சந்தித்து திமுக வேட்பாளருக்கு வாக்குச் சேகரித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *