
புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியே மீண்டும் அமையும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் ஒன்பதாம் நாள் தேர்தல் நடைபெற்றது. தேர்லுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியாகின.
பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 முதல் 19 தொகுதிகள் வரை கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி பத்து முதல் 12 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 முதல் 20 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும், காங்கிரஸ் கட்சி ஆறு முதல் எட்டு இடங்களைப் பெறும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் இரண்டு முதல் நான்கு தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் கணித்துள்ளது.




