ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானார்!

காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்தார்.

இதையடுத்து மருத்துவமனை முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள் குவிய தொடங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *