Puducherry:தீபாவளி பண்டிகை.. புதுச்சேரிக்கு மட்டும் 5 நாட்கள் விடுமுறை ! ஏன் தெரியுமா?

Advertisements

புதுச்சேரி:தீபாவளி பண்டிகையை ஒட்டிப் புதுச்சேரியில் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 31-ந்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அக்.30 முதல் நவ.3-ந்தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாகத் தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை விடும் நிலையில் புதுவை விடுதலை நாள் உள்ளிட்ட 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ.2 கல்லறை நாள், நவ.3 ஞாயிறு என மொத்தம் 5 நாட்கள் தீபாவளியை முன்னிட்டு புதுவையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான நவ.1-ந்தேதி அரசு விடுமுறையாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்.31-ந்தேதி தீபாவளி பண்டிகை, நவ.1 வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளதால் சனி, ஞாயிறு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *