Women’s t20 world cup Final : கோப்பையை வெல்வது யார்?நாளை மல்லுக்கட்டும் தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள்!

நாளைத் துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

துபாய்:9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்தது. இதில் லீக் சுற்று முடிவில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகள் லீக் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறின.

இதையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தித் தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் 8 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், நாளைத் துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *