Puducherry – BJP: கருத்து கேட்பதற்கான வாகன பயணம் துவக்கம்!

புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் இருந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான கருத்து கேட்பதற்கான வாகனத்தைப் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாஜக தலைவர் செல்வகணபதி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாகப் பொது மக்களிடமிருந்து எதையெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளாக இருக்க வேண்டும் என்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் இருந்து கருத்து கேட்பதற்கான வாகன பயணம் தொடங்கப்பட்டது.

இன்று பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்வில்மாநில தலைவர் செல்வகணபதிMP தலைமையில் புதுச்சேரி உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் முன்னிலையிலும் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு கருத்து கேட்பதற்கான வாகன பயணம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த வாகனம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி முழுவதிலும் மக்கள் கூடுகின்ற இடங்களில் வலம் வந்து மக்களின் எண்ணங்களைப் படிவங்களாகப் பெற்று அதிலிருந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி என்பது நிறைவு பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *