Lok Sabha Election 2024: பொறுப்பாளர்களை நியமித்து பாஜக மேலிடம்!

Advertisements

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு, இரண்டு பொறுப்பாளர்களை நியமித்து பாஜக மேலிடம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவ தேர்தல் தொடர்பான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைமுன்னிட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்துவரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளும், பல்வேறு குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கியுள்ளன. திமுக தனது முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் உடன் நாளை, தொகுதிப் பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தான், மூன்றாவது முறையாக மத்தியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டுகிறது. இதையோட்டி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், மாநில மற்றும் யூனியர் பிரேதசங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பீகார், உத்தரபிரதேசம், கோவா, ஜார்கண்ட் உள்ளிட்ட 23 மாநிலங்கள் மற்றும்  தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. அதில், தமிழகத்திற்கும் இரண்டு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அரவிந்த் மேனன் மற்றும் சுதாகர் ரெட்டி ஆகியோர் தமிழ்நாட்டிற்கான தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த குழு விரைவில் சென்னை வந்து, மாநில தலைமையுடன் ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, பாஜக தலைமையில் மாநிலத்தில் கூட்டணி அமைப்பது அல்லது தனித்து போட்டியிடுவது உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதேநேரம், மாநில அரசியல் சூழலுக்கு ஏற்ப தேர்தல் வியூகங்களை வகுத்து, தேர்தலை எப்படி எதிர்கொள்ளலாம் என்றும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக நாடு முழுவதுமே தேர்தல் பணிகளை ஏற்கனவே முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்குமான, வேட்பாளர் பரிந்துரை பட்டியலை தயார் செய்யும்படி, மாநில தலைமைக்கு முன்கூட்டியே வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை மற்றும் தென்சென்னை உள்ளிட்ட குறிப்பிட்ட தொகுதிகளை குறிவைத்து, பாஜக ஏற்கனவே தீவிரமாக களப்பணி செய்து வருகிறது. இதனால் அந்த தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.  இதனிடையே, அதிமுக கூட்டணியில் இல்லாத நிலையில், சில சிறிய கட்சிகள் மட்டுமே தற்போது வரை பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *