
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 2026 ஐபில் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. நாளை மறுதினம் நடைபெறும் குவாலிபையர் 1 போட்டியில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் ப்ரீஸ்க் ஆகியோர் களம் இறங்கினர்.
மிட்செல் மார்ஷ் 37 பந்துகளில் 5 சிக்சர் 4 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சதம் அடித்த லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கம்பேக் கொடுத்து லக்னோ ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.61 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 சிக்சர் 11 பவுண்டரியுடன் 118 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 227 ரன்கள் குவித்தது. இதையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆர்சிபி அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
தொடக்க வீரர் பிலிப் சால்ட் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். ரஜத் பட்டிதார் 14 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டோன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.நட்சத்திர வீரர் விராட் கோலி 30 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 11.2 ஓவர்களில் அணி 4 விக்கெட்டை இழந்து 123 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். 33 பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் ஜிதேஷ் சர்மா 6 சிக்சர் மற்றும் 8 பவுண்டரியுடன் 85 ரன்கள் சேர்க்க 18.4 ஓவர்களில் பெங்களூரு அணி வெற்றி இலக்கை எட்டியது.இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றில் குவாலிபையர் 1 போட்டிக்கு ஆர்சிபி தகுதி பெற்றுள்ளது.



