Andra : பி.எஸ்.எல்.வி.-சி 62 இன்று விண்ணில் ஏவல்..!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி 62 இன்று விண்ணில் ஏவப்படுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 10 மணியளவில் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி 62 விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த ராக்கெட் மூலம், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதனுடன் ஸ்பெயின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இதனுடன் இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன.

தொடர்ந்து,இறுதிக்கட்ட சோதனைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *