Priyanka Mohan: மீண்டும் நானியுடன் ஜோடி!

Advertisements

மீண்டும் ஜோடி சேர்ந்த நானி, பிரியங்கா!

ஐதராபாத்: கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி களில் நடித்துவிட்டு, பிறகு சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் பிரியங்கா அருள் மோகன். பிறகு சூர்யாவுடன் இணைந்து ‘எதற்கும் துணிந்தவன்’, மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘டான்’ ஆகிய படங்களில் நடித்திருந்த அவர், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’தளபதி 68’ என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.


தவிர, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ’கேப்டன் மில்லர்’, ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ’பிரதர்’, தெலுங்கில் பவன் கல்யாணுடன் ‘ஓஜி’ ஆகிய படங்களில் நடித்து வரும் பிரியங்கா அருள் மோகன், தெலுங்கில் நானி நடிக்கும் 31வது படத்தின் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

இதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். இத்தகவலை படக்குழு அறிவித்துள்ளது. ‘அந்தே சுந்தரானிகி’ என்ற படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் மீண்டும் நானி ஹீரோவாக நடிக்கிறார். இது நானியின் 31வது படம். ஏற்கனவே நானி, பிரியங்கா அருள் மோகன் இணைந்து ‘கேங் லீடர்’ படத்தில் நடித்திருந்தனர்.

டி.வி.வி என்டர்டெயின்மெண் ட்ஸ் சார்பில் டி.வி.வி.தனய்யா, கல்யாண் தாசரி இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *