Priya Bhavani Shankar: வெள்ளை நிற சேலையில் கவர்ச்சி!

Advertisements

நடிகை பிரியா பவானி ஷங்கர் வெள்ளை நிற சேலை கட்டி, அசப்பில் நயன்தாரா லுக்கில் எடுத்துக் கொண்ட போட்டோ ஷூட் வைரலாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் சின்னத்திரை நடிகையாக மாறியவர் பிரியா பவானி ஷங்கர். இவர் நடித்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, திரைப்பட வாய்ப்பு இவர் தேடி செல்லாமலே இவர் கதவைத் தட்டியது. அதன்படி, இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் ஹீரோவாக நடித்த ‘மேயாத மான்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இவர் நடித்த இந்தப் படம், தளபதி விஜய் நடித்த மெர்சல் படத்துடன் வெளியான போதும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து  எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், அருண் விஜய் ஜோடியாக மாஃபியா, யானை, அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஹாஸ்டல், ராகவா லாரன்சுக்கு ஜோடியாக ருத்ரன் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.

இரண்டு வருடத்தில் தமிழ் சினிமாவில் தனைக்கெனத் தனி இடத்தைப் பிடித்தது மட்டுமின்றி, 5 வருடத்தில் கோடிகளில் சம்பளம் பெரும் முன்னணி நாயகியாக உயர்ந்தார். தற்போது இவரில் கைவசம் டிமான்டி காலனி 2, இந்தியன் 2 ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இதைத் தவிர சூப்பர் அரை டஜன் படங்களைக் கைவசம் வைத்துள்ளார். தமிழை தாண்டித் தெலுங்கிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அடிக்கடி, தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் விதமாக விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது, வெள்ளை நிற சேலையில் சைடு போஸ் கொடுத்துள்ள பிரியா பவானி ஷங்கரின் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள்… அசப்பில் நயன்தாரா போல்  இருப்பதாகக் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *