
சென்னை:
பாடல்களுக்கு உரிமை கோரும் வழக்கு: இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்
மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம், தாங்கள் உரிமம் பெற்ற பாடல்களை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தடுக்கும் நோக்கில், 2010-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், தேவர் மகன் குணா உள்ளிட்ட 109 படங்களில் பாடல்களின் உரிமையைப் பெற்றதாகவும், இசையமைப்பாளர் இளையராஜா மனைவியின் பெயரில் உள்ள நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது அந்தப் பாடல்களை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எதிர்மனுதாரராக இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது மனைவியின் பெயரில் உள்ள நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக, இன்று காலைச் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இளையராஜா நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
