Honeymoon: திருமண வரவேற்புக்கு வராமல் தேனிலவுக்கு சென்ற தம்பதி!

Advertisements

திருமண வரவேற்பு விழாவுக்கு வராமல் புதுமண தம்பதி ஓன்று தேனிலவுக்கு சென்ற சம்பவம் குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருமணம் பிடிக்காமல் கடைசி நேரத்தில் மணமகன் அல்லது மணமகள் ஓட்டம் பிடித்தது குறித்த செய்திகளைக் கேள்வி பட்டிருப்போம். ஆனால் மணமக்கள் தங்களது திருமண வரவேற்பு விழாவுக்கு வராமல் தேனிலவுக்கு சென்ற தகவலை மணமகனின் தங்கை வலைதளத்தில் பகிர்ந்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.

இது தொடர்பாக மணமகனின் தங்கையின் வலைதள பதிவில், எனது அண்ணனின் திருமண வரவேற்புக்காக உறவினர்கள் காத்திருந்தனர். வழக்கமாகத் திருமண வரவேற்புக்கு முன்பாகத் திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் மது அருந்தி மகிழ்ச்சி அடைவார்கள். பின்னர் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வர். ஆனால் அன்று நீண்ட நேரம் காத்திருந்தும் மணமக்கள் வரவில்லை. அங்கு அவர்கள் வரமாட்டார்கள் என்று எனது அண்ணனின் நண்பர் ஒருவருக்கு மட்டுமே தெரியும்.

காரணம் மணமக்கள் தேனிலவுக்கு சென்று விட்டனர். இது எங்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையறிந்த எனது தாயும், தந்தையும் மிகுந்த வேதனை அடைந்தனர். அவர்கள் தேனிலவுக்கு பிரிஸ்டல் விமான நிலையம் சென்ற பிறகே எங்களுக்குத் தகவல் தெரிந்தது எனக் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *