Edappadi Palaniswami:எல்லைகளில் மதுவிலக்கு சோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும்!

Advertisements

எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

சென்னை:அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது.

நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று விடியாத் தி.மு.க. முதல்-அமைச்சர் செயல்படுவது எந்தப் பலனும் அளிக்காது. அடிப்படை நிர்வாகச் சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த திராணியற்ற விடியாத் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அண்டை மாநில சாராயங்கள் புழங்குவதை தடுப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து, எல்லைகளில் மதுவிலக்கு சோதனையைத் தீவிரப்படுத்தவும் விடியாத் தி.மு.க. முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *