Actor Ajith:மீண்டும் கார் ரேஸில் களமிறங்கிய அஜித்.. இணையத்தை தெறிக்க விடும் போட்டோஸ்!

நடிகர் அஜித் துபாயில் கார் ரேஸில் ஈடுபடும் போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். எந்தச் சினிமா பின்னணியும் இல்லாமல் பல போராட்டங்களைக் கடந்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக மாறி உள்ளவர் அஜித்.

தனக்கென லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார். இதனால் அவரின் படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவரின் ரசிகர்கள் அஜித் படங்களைக் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துள்ள அஜித் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இது கடந்த ஆண்டில் வெளியான மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக மாறிய்டது.

நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கி வரும் விடா முயற்சி படத்தில் அஜித் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள குட் பேட் அக்லி என்ற படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மைத்ரீ மூவி மேக்கர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்றது. ஒரு மாதம் நடந்த அப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் அண்மையில் நிறைவடைந்தது.

இந்த மாத இறுதியில் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தொடங்க உள்ளது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம், இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா காசண்டரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

நடிப்பை தாண்டி மோட்டார் பைக் ரேஸ், ஸ்போர்ட்ஸ் கார்கள்மீதான ஆர்வத்திற்கும் அஜித் பெயர் பெற்றவர். சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தாலும் சாகச பைக் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

எனினும் சில தனிப்பட்ட காரணங்களால் கார் ரேஸில் ஈடுபடுவதை அஜித் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் கார் ரேஸை தொடங்கி உள்ளார் அஜித். துபாயில் அவர் கார் ரேஸில் ஈடுபடும் போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *