Premalatha Vijayakanth: வாழ்த்தியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரேமலதா!

Advertisements

பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு நேற்று முன்தினம் நடைபெற்றது.  கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.’

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக கழகப் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடி K.பழனிச்சாமி, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம், மதிப்புக்குரிய சசிகலா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், பாட்டாளி மக்கள் கட்சியின் G.K.மணி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் மற்றும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் எனக்கு தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரிலும் வாழ்த்துக்களை தெரிவித்த கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *