சிரியாவில் வான்வழி தாக்குதலை நடத்திய அமெரிக்க ராணுவம்.!

Advertisements

சிரியாவில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளை குறிவைத்து மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதல்களை அமெரிக்க ராணுவம் நடத்தியுள்ளது.

சிரியாவின் பால்மிரா அருகே கடந்த 13 ஆம் தேதி ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உட்பட மூன்று அமெரிக்கர்கள் உயிர் மாய்க்கம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சிரியாவில், ‘ஆப்பரேஷன் ஹாவ்க்கி’ என்ற பெயரில் அமெரிக்கா தாக்குதலை துவங்கி உள்ளது.

இதையடுத்து, மத்திய சிரியாவில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க விமானப்படை மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது. பயங்கரவாதிகளின் மீதான தாக்குதலை, அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டுக்கள் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக சமூக வலைதள பதிவில், அமெரிக்க வீரர்கள் உயிர் மாய்க்கம் செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கோட்டைகள் மீது மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டால், சிரியாவிற்கு சிறந்த எதிர்காலம் உண்டு என்றார்.

மேலும், சிரிய அரசும் இந்த நடவடிக்கையை ஆதரித்து பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஒத்துழைப்பு தருகிறது என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *