Israel war : பாலஸ்தீனர்கள் மீது, இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு! 38-பேர் உயிரிழப்பு!!

Advertisements

உதவிபொருட்கள் வாங்க நின்ற பாலஸ்தீனர்கள் மீது, இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் 38 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல்- காசா இடையே விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். இருப்பினும், இஸ்ரேல் வான் தாக்குதலை நிறுத்தவில்லை. நேற்றிரவு காசாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். தற்போது பட்டினியால் தவித்து வரும் பாலஸ்தீனர்கள் உதவிப்பொருட்களுக்களுக்கான காத்திருந்து வருகின்றனர்.

அவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்க லாரிகள் மூலம் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த லாரிகளில் வரும் உதவிப்பொருட்களை பெறுவதற்கு, பாலஸ்தீன மக்கள் முண்டியத்துச் செல்லும் பரிதாப நிலை ஏற்படுகிறது. அவ்வாறு முண்டியடித்துச் செல்லும் பட்டினியால் தவிக்கும் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. அவ்வாறு காசாவில் பல்வேறு இடங்களில் உதவிப் பொருட்கள் வாங்கும் இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 38 உயிரிழந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *