
முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பிறந்த நாளையொட்டி அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
1991 முதல் 1996 வரை இந்தியாவின் பிரதமராக இருந்த நரசிம்மராவின் 104ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் பிரதமர் பதவியில் ஐந்தாண்டு நிறைவு செய்த சாதனையை முதலில் செய்தவர் நரசிம்மராவ் ஆவார்.
நரசிம்மராவ் பிறந்த நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் மாற்றத்துக்கான காரத்தில் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை வடிவமைத்ததில் நரசிம்மராவின் பங்கைக் குறிப்பிட்டுள்ளார். அவரின் அறிவும் திறமையும் புலமையும் தன்னை ஈர்த்ததாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரியும் நரசிம்மராவை நினைவுகூர்ந்து ஒரு காணொலியைத் தனது எக்ஸ்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


