ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இடம்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கமல்ஹாசனுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் விருதுக்குரிய படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம்பெறுவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், உலக அளவில் திரைத்துறையின் உச்சப்பட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மொழி – தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது என்றும் தெரிவித்துள்ளார்.


