Lok Sabha Elections 2024: தமிழ்நாடு உள்ளிட்ட 102 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது!

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை முதல் கட்ட தேர்தலுக்கான ஹரி பானையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி தமிழகம் உள்பட 102 தொகுதிகளில் இன்று வேட்பாளர் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதற்கான அறிவிப்பாணையை இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து தேர்தலுக்கான வேட்புமான தாக்கல் நடைமுறை தொடங்கியது.

அந்த அறிவிப்பாணையில் மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் பீகாரில் பண்டிகை காரணமாக மார்ச் 27 க்கு பதிலாக 28 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள், மார்ச் 30-ல் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 27 ஆம் தேதி கடைசி நாள்!

அதேபோல் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு காணும் மற்ற மாநிலங்களான தமிழ்நாடு, அருணாச்சலப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரப்பிரதேசம்,

உத்தராகண்ட், மேற்குவங்கம், அந்தமான் நிகோபர் தீவுகள், ஜம்மு – காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 27 வேட்புமனுக்களை தாக்கல் செய்யக் கடைசி நாள் என்றும் இம்மாநிலங்களில் மார்ச் 28 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும்.

வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30 கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நாள்:

இந்த முதல்கட்ட தேர்தலில் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அதாவது, தமிழகத்தில் 39 தொகுதிகள், ராஜஸ்தானில் 12, உத்தரப்பிரதேசத்தில் 8, மத்திய பிரதேசத்தில் 6, உத்தராகண்ட், அசாம், மற்றும் மகாராஷ்டிராவில் 5, பிஹாரில் 4, மேற்குவங்கத்தில் 3, அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், மேகாலையாவில் 2, சத்தீஸ்கர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அந்தோமான் நிகோபார் தீவுகள், ஜம்மு – காஷ்மீர், லட்சத்தீவுகள் மற்றும் புதுசேரியில் 1 தொகுதிகள் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4:

நாட்டின் 2024ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் அட்டவணையை மார்ச் 16 ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜுன் 1 ஆம் தேதிவரை மொத்தம் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *