கல்வித்துறையில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் – அமைச்சர் பிரகலாத் ஜோஷி!

நாட்டின் கல்வித்துறையை மேலும் மேம்படுத்த முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என  புதியதாகப் பொறுப்பெற்றுள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரியாக பொறுப்பு வகிக்கும் பிரகலாத் ஜோஷிக்கு, கல்வித்துறை அமைச்சகம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

 

புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிரகலாத் ஜோஷி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமருக்கு நன்றி தெரிவித்ததுடன், நாட்டின் கல்வித்துறையை மேலும் மேம்படுத்த முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *