இந்த அரசை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது – ராகுல் காந்தி !!

அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலான நடைப்பெற்ற தொடர் போராட்டங்களை அடுத்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாணவர்களின் இந்த வெற்றியை வரவேற்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், இது கல்வி அமைப்பை மறுசீரமைப்பதற்கான முதல் அடி என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், அமைச்சரின் ராஜினாமாவுடன் நின்றுவிடாமல், தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் பிரதமர் மோடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இறுதியாக, இந்த அரசை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *