பொருநை அருங்காட்சியக பாறையில் இந்தி எழுத்து.. அதிகாரிகள் விசாரணை.!

நெல்லை மாவட்டம் பொருநை அருங்காட்சியக பாறையில் மர்ம நபர்கள், ‘ராம்’ என இந்தியில் எழுதிவிட்டுச் சென்ற சம்பவத்தால் சலசலப்பு ஏற்பட்டது.

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அகழாய்வுகளில் கிடைத்த பழங்கால பொருட்கள், நெல்லை ரெட்டியார்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ள நிலையில் வண்ணம் பூசி அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் புல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள பாறையில் ‘ராம்’ என இந்தியில் சிலர் எழுதிவைத்துச் சென்றனர்.

இது குறித்து அதிகாரிகள் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ள அருங்காட்சியக கட்டட வளாகத்தில் இந்தியில் இதுபோல எழுதியது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *