Anbumani :மீனவர்களுக்கு ஆதரவாகக் களத்தில் குதித்த பா.ம.க…தொண்டர்களுக்கு அழைப்பு!

Advertisements

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்கள்மீதான இலங்கை அரசின் அடக்குமுறையைக் கண்டித்து பா.மக. சார்பில் வருகிற 8-ந்தேதி இலங்கை தூதரகத்தை முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து வங்க கடலில் மீன்பிடிக்க செல்லக்கூடிய தமிழக மீனவர்களை இலங்கை படை தொடர்ந்து தாக்கி வருவதாலும், அவர்களுடை உடைமைகளை அதாவது வலைகளைச் சேதப்படுத்துவது, கைது செய்து சித்ரவதை செய்வது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மீன்பிடிக்கும் உரிமையை மதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களை இலங்கை கடற்பட்டையினர் மதிக்காமல் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் பா.ம.க. சார்பில் மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளது.

இந்தப் போராட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தமிழக மீனவ அமைப்புகளுக்கும் இலங்கை தூதரக முற்றுகை போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *