Puducherry: சுற்றுலா என்ற போர்வையில் கலாச்சாரத்தை இழக்கும் புதுச்சேரி!

Advertisements

புதுச்சேரி அரசு சுற்றுலாவை வளர்க்கும் என்ற நோக்கத்தில் இங்கு வரும் இளைஞர்கள் மற்றும் இளசுகள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது… இது போன்ற கலாச்சார சீரழிவுகளை புதுச்சேரி அரசு வளர்த்து வருவது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாவுக்கு வருகின்றனர். குறிப்பாக வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஆயிர கணக்கில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் உள்ள விடுதிகள் மற்றும் மதுபான கடை, ரெஸ்டோ பார்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த மூன்று நாட்களில் புதுச்சேரியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசலும் மக்கள் கூட்டங்களும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி செட்டி தெருவில் உள்ள மதுபான கூடத்தில் பெண் மற்றும் ஆணும் மது அருந்திவிட்டு வெளியே வந்து நிற்கின்றனர் பெண் ஒருவர் தள்ளாடி நிற்கும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து அந்த பெண் மயக்க நிலையில் நின்று கொண்டும், கீழே விழுந்து படுத்துக்கொண்டு அலப்பறைகள் செய்த காட்சிகள் அங்கு இருந்த பொது மக்களை முகம் சுளிக்க வைத்தது.

புதுச்சேரி அரசு சுற்றுலாவை வளர்க்கும் என்ற நோக்கத்தில் இங்கு வரும் இளைஞர்கள் மற்றும் இளசுகள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது… இது போன்ற கலாச்சார சீரழிவுகளை புதுச்சேரி அரசு வளர்த்து வருவது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையை புதுச்சேரி அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தகுந்த நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக உள்ளது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *