“ஒரு காலத்தில் உப்பு மட்டுமே… இன்று மெட்ரோ பெட்டிகள்!” – பிரதமர் நெகிழ்ச்சி….!.

உப்பு மட்டுமே உற்பத்தியான குஜராத்தில் தற்போது மெட்ரோ பெட்டிகள், என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, வளர்ச்சியை நோக்கி குஜராத் மிக பெரிய அடியை எடுத்து வைத்திருக்கிறது என்று கூறினார்.

ஒரு காலத்தில் உப்பு தவிர்த்து வேறு எதுவும் குஜராத்தில் உற்பத்தியாகவில்லை என்றும் ஆனால், தற்போது சிப்புகள், மெட்ரோ ரெயில் பெட்டிகள், நவீன ரெயில்களுக்கான என்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

நம்முடைய நாட்டில் பருவநிலைக்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒரு துறையை முதன்முதலில் நிறுவிய மாநிலம் என்ற பெருமையை குஜராத் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *