ஈரானின் எஞ்சிய ஏவுகணைகளை அழிக்கத் திட்டம்…. அதிபர் டிரம்ப் அதிரடிப் பேச்சு…!

ஈரான் தவறாக நடந்துகொண்டாலோ அல்லது தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டாலோ மீண்டும் ராணுவத் தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, ஈரான் விவகாரத்தில் தாங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் தங்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். ஈரானின், எஞ்சியுள்ள 15 சதவீத ஏவுகணைகளை தான் முற்றிலுமாக அழிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.
ஏனென்றால், அவர்கள் மீண்டும் ஆயுதங்களை உருவாக்கத் தொடங்குவதற்கு இது ஒரு ஆரம்பமாக அமையும் எனத் தெரிவித்தார்.
மேலும், ஈரான் தவறாக நடந்துகொண்டாலோ அல்லது தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டாலோ அந்நாட்டின் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *