தமிழக 17-வது சட்டப்பேரவை : இன்று முதல் கூட்டத்தொடர் தொடக்கம்….!

தமிழகத்தின் 17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது.
தமிழக சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் 17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் வந்து சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தற்காலிக பேரவை தலைவர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், பேரவை தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் என அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, பெரும்பான்மையை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *