துன்பமான தருணத்தில் வெனிசுலா பக்கம் நிற்கும் இந்தியா – பிரதமர் மோடி அறிவிப்பு!

Advertisements

வெனிசுலா நாட்டில் கடுமையான நிலநடுக்கத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெனிசுலா நாட்டில் சான் பெலிப் என்னும் நகரத்தில் ஏழரை ரிக்டர் என்னும் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தில் உயரமான நூற்றுக்கணக்கான கட்டடங்கள் அடியோடு நொறுங்கி விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கிப் பத்தாயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வெனிசுலா நாட்டு மக்களுக்கும் அரசுக்கும், குறிப்பாக நிலநடுக்கத்தில் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் மக்களுக்கும், இந்திய மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிலநடுக்கத்தில் சிக்கிக் காயமடைந்தோர் விரைவில் குணம்பெற்று மீண்டுவர இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தத் துன்பக் காலத்தில் பாதிக்கப்பட்டோரின் பக்கம் தாங்கள் இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *