நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த வெனிசுலா – ரிக்டர் அளவில் 7.5 ஆகப் பதிவு!

Advertisements

வெனிசுலா நாட்டின் சான் பெலிப் நகரில் இரண்டு முறை ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் அடியோடு நொறுங்கி விழுந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

வெனிசுலா தலைநகர் கராக்கசுக்கு மேற்கே 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான் பெலிப் என்னும் நகரத்தில் இரண்டு முறை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் முதன் முறை ஏழு புள்ளி இரண்டாகவும், இரண்டாவது முறை ஏழரையாகவும் பதிவாகியுள்ளது. இந்த வலுவான நிலநடுக்கத்தில் உயரமான நூற்றுக்கணக்கான கட்டடங்கள் அடியோடு நொறுங்கி விழுந்தன.

இந்த நிலநடுக்கத்தில் 32 பேர் உயிரிழந்ததாகவும், 700 பேர் காயமடைந்துள்ளதாகவும் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் அடியோடு நொறுங்கி உள்ளதால் இடிபாடுகளில் சிக்கிப் பத்தாயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்டட இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருப்போரை மீட்கும் பணிகளில் வெனிசுலா நாட்டு இராணுவம், காவல்துறை, மீட்புப் படை ஆகிய அமைப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *