நீலப் பொருளாதாரம் & தூய ஆற்றல் – ஐஸ்லாந்துடன் கைகோர்க்கும் இந்தியா!

Advertisements

நீலப் பொருளாதாரம் சார்ந்த துறைகளில் ஐஸ்லாந்து கொண்டுள்ள வல்லமை போற்றுதலுக்குரியது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு  வெளியிட்டுள்ளார். அதில் ஐஸ்லாந்துப் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ஃப்ரோஸ்டாடோட்டிருடன் மிகச் சிறப்பானதொரு சந்திப்பை மேற்கொண்டதாக கூறினார். ஐஸ்லாந்துடனான நட்புறவை இந்தியா பெரிதும் மதிக்கிறது.

தூய ஆற்றல், மீன்வளம், நிலைத்தன்மை, புவிவெப்ப ஆற்றல், கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து தாங்கள் கலந்தாலோசித்ததாக கூறினார். மேலும் நீலப் பொருளாதாரம் சார்ந்த துறைகளில் ஐஸ்லாந்து கொண்டுள்ள வல்லமை போற்றுதலுக்குரியது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ‘இந்தியா-EFTA TEPA’ ஒப்பந்தமானது, வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் தொடர்புகளுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *