10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – இன்று காலை வெளியீடு!

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“2025-26 ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை), 20-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இந்த முடிவுகளை வெளியிடுவார்.

மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ள பின்வரும் இணையதளங்களைப் பயன்படுத்தலாம்:

www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in. இந்த இணையதளங்களில் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அத்துடன், மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகள் காட்சிப்படுத்தப்படும்.

மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விண்ணப்பத்தின்போது வழங்கியிருந்த மொபைல் எண்ணுக்கு, குறுஞ்செய்தி (SMS) மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *