SBI Report:அந்த ஒரு விஷயத்தில் அமெரிக்கா, ஜெர்மனியை விட இந்தியா மேல்!

Advertisements

புதுடில்லி: அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சை விட இந்தியா பணவீக்கத்தை சிறப்பாகக் கையாண்டதாக எஸ்.பி.ஐ., வங்கி கூறியுள்ளது.

இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரிசர்வ் வங்கி, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் இணைந்து செயல்படுத்திய சீர்திருத்தம் காரணமாக உருவான துடிப்பான நிதி நிலை கட்டமைப்பு காரணமாக, பணவீக்கம் குறித்த இலக்கு நிர்ணயிக்க முடிந்தது.

2021 முதல் 2024 வரை, இந்தியாவை காட்டிலும் பெரிய பொருளாதார நாடுகள் கடுமையான பணவீக்க சவால்களைச் சந்தித்தன. இந்தக் காலத்தில், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சை விடப் பணவீக்கத்தை இந்தியா சிறப்பாகக் கையாண்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *