தில்லியில் மத்திய அரசு செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தில்லியில், அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, எளிதாக வணிகம் செய்வதற்கான அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை அமல்படுத்துவது குறித்தும் செயலாளர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.
மேலும், சில செயலாளர்கள், தங்கள் அமைச்சகங்களின் செயல்பாடுகள் மற்றும் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.

