டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு – விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்!

Advertisements

26 காலிப் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ள குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி, குரூப்-1 முதல்நிலைத் தேர்வு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், துணை ஆட்சியர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட பதிவாளர், தொழிலாளர் உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 26 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு வருகின்ற செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கி ஜூலை 29 ஆம் தேதி வரை முடிவடையும் என தெரிவித்துள்ளது. மேலும், வயது வரம்பு பொதுப்பிரினருக்கு 34 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *